மீண்டு(ம்) எழுகிறதா TCS??
இந்தியாவின் மிகப்பெரிய IT சேவை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட கோஸ்டல் கிளவுட்டை $70 கோடிக்கு கையகப்படுத்துவதாக அறிவித்தது. சிட்டிகுரூப்பின் கேப்டிவ் BPO பிரிவான சிட்டிகுரூப் குளோபல் சர்வீசஸை $50.5 கோடிக்கு வாங்கி பின், டி.சி.எஸின் மிகப் பெரிய கையகப்படுத்துதல் இது தான். ஆனால் பங்கு சந்தைகள் இதற்கு குறைந்த அளவில் எதிரிவினை ஆற்றின.
வியாழக்கிழமை, TCS பங்கு விலை ₹3,206 இல் தொடங்கி ₹3,191.6 இல் முடிவடைந்தது. இது முந்தைய நாளின் ₹3,188.15 இலிருந்து சற்று அதிகமாகும்.
TCS-ஐ கண்காணிக்கும் ஆய்வாளர்கள், இந்த கையகப்படுத்தலுக்கான விலை மிகவும் அதிகம் என்று கருதுகின்றனர். FY24-க்கான கோஸ்டல் கிளவுடின் ஒருங்கிணைந்த வருவாய் $13.2 கோடியாகவும், கடந்த 12 மாதங்களில் $14.1 கோடியாகவும் இருந்தது. இந்த கையகப்படுத்தல் TCS-க்கு அமெரிக்காவில் 400 Salesforce சான்றளிக்கப்பட்ட பணியாளர்களை பெற வகை செய்கிறது.
இந்தச் சொத்துக்காக டி.சி.எஸ் செலுத்திய விலை, கடந்த காலத்தில் Salesforce ஆலோசனைத் திறன்களுக்காக அதன் போட்டியாளர்கள் செலுத்திய விலையை விட அதிகமாக உள்ளது ஒப்பிடத்தக்கது.
”வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) தரவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக எந்தவொரு மாற்றத்திற்கும் தரவுகளுக்கான அணுகல் மிக முக்கிய பங்கு வகிக்கும் AI உலகிற்கு இது பொருந்தும். இந்த இரண்டு கையகப்படுத்துதல்களும் TCS-க்கு அத்தகைய ஒப்பந்தங்களுக்கு குறிப்பிடத்தக்க அணுகலை வழங்கும் ”என்று பரீக் ஜெயின் கன்சல்டிங் மற்றும் ERIIT இன் நிறுவனர் பரீக் ஜெயின் கூறினார்.
எச்எஃப்எஸ் ரிசர்ச்சின் ஐடி சேவைகள் & பிஎஃப்எஸ் பிரிவின் தலைவர் ஹன்சா ஐயங்கார், சேல்ஸ்ஃபோர்ஸ் ஆலோசனை திறன்களை குறிவைத்து டிசிஎஸ் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையை மேற்கொள்கிறது என்று கூறியுள்ளார்.
டிசிஎஸ் அதன் விரிவாக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் பலர் சுட்டிக்காட்டினர். செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி ₹1.06 லட்சம் கோடி ரொக்க இருப்பை கொண்டுள்ள டி.சி.எஸுக்கு கையகப்படுத்தல் ஒரு பிரச்சினையாக இருக்காது என்கின்றனர்.
