22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

APPLE செய்த சாதனை என்ன தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 0.4% உயர்ந்து, அதன் மொத்த சந்தை மதிப்பு $4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் இது மூலம் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நிறுவனமாக மாறியுள்ளது.

இந்நிறுவனத்தின் பங்கு விலை ஏப்ரலில் வெகுவாக சரிந்த நிலையில், அதன் பிறகு கடந்த 6 மாதத்தில் 56% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதன் புதுப்பிக்கப்பட்ட ஐபோன் தொகுப்புகள் பற்றிய நம்பிக்கை மற்றும் இறக்குமதி வரிகள் தளர்வு ஆகியவற்றின் விளைவாக சமீபத்திய மாதங்களில் ஆப்பிள் பங்கு விலை உயர்ந்து, மொத்த சந்தை மதிப்பில் சுமார் $1.4 லட்சம் கோடி உயர்வுக்கு வகை செய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவன பங்கு விலை புதிய உச்சத்தை அடைந்து, கடந்த டிசம்பரில் எட்டப்பட்ட உச்ச அளவை விஞ்சியிருந்தது.

”இதுவரை AI துறையில் வெற்றி பெற முடியாத போதிலும், ஆப்பிள் $4 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது ஒரு திருப்புமுனை தருணம்”என்று வெட்பஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் டான் ஐவ்ஸ் கூறியுள்ளார்.

அதன் சமீபத்திய ஐபோன் வெளியீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் விற்பனையாகியுள்ள நிலையில், இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவில் விற்பனைக்கு வந்த முதல் 10 நாட்களில் ஐபோன் 17 தொகுப்பு, ஐபோன் 16 தொகுப்பை விட 14% அதிகமாக விற்பனையானது என கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

நிறுவனம் அதன் புதிய M5 சிப் மூலம் ஐபேட் ப்ரோ, விஷன் ப்ரோ மற்றும் தொடக்க நிலை மேக்புக் ப்ரோவின் புதிய பதிப்புகளையும் அறிமுகப்படுத்தியது, இது முக்கியமான விடுமுறை காலத்திற்கு முன்னதாக அதன் தயாரிப்பு வரிசையை நிரப்ப உதவியது.

என்விடியா கார்ப் நிறுவனம் இந்த $4 லட்சம் கோடி மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனமாக மாறிய சில மாதங்களுக்குப் பிறகு ஆப்பிள் இதை எட்டியுள்ளது. மைக்ரோசாப்ட் கார்ப் நிறுவனம், வலுவான காலாண்டு வருவாயைப் பதிவு செய்த பின், ஜூலை மாதத்தில் இந்த இலக்கை ஒரு முறை எட்டியது. ஆனால் பின்னர் அதன் பங்கு விலை சரிந்தது. ஓபன்ஏஐ உடனான புதிய ஒப்பந்தத்தை அறிவித்த பிறகு செவ்வாயன்று அது மீண்டும் இந்த மைல்கலை எட்டியுள்ளது