ஸ்டார்பக்ஸ் அதிரடி முடிவு..
சீனாவில் ஸ்டார்பக்ஸ் கடைகளை இயக்குவதற்காக சீன முதலீட்டு நிறுவனமான போயு கேபிட்டலுடன் கூட்டணி அமைப்பதாக ஸ்டார்பக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சீனாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நடவடிக்கைகளில் 60 சதவீத பங்குகளை வாங்க போயு டாலர்களை அளிக்கும். இந்த கூட்டு முயற்சியில் ஸ்டார்பக்ஸ் 40 சதவீத பங்குகளைத் தக்க வைத்துக் கொள்ளும். ஸ்டார்பக்ஸ் பிராண்டை தன் வசம் வைத்து, பிரான்ச்சைசிகளுக்கு விற்பனை உரிமம் வழங்கும்.
ஸ்டார்பக்ஸ் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் நுழைந்து, அங்கு காபி கலாச்சாரத்தை வளர்த்த பெருமைக்குரியது. அமெரிக்காவிற்கு வெளியே ஸ்டார்பக்ஸின் இரண்டாவது பெரிய சந்தையாக சீனா உள்ளது. அங்கு 8,000 விற்பனையகங்களை கொண்டுள்ளது.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் லக்கின் காபி போன்ற மலிவான, வேகமாக வளர்ந்து வரும் சீன ஸ்டார்ட் அப்களுடன் சீனாவில் போராடி வருகிறது.
இதன் விளைவாக, ஸ்டார்பக்ஸ் சீனாவில், குறிப்பாக சிறிய நகரங்களில் தனது வணிகத்தை வளர்க்க உதவும் ஒரு கூட்டாளியை தேடி வந்தது.
ஸ்டார்பக்ஸின் சீன செயல்பாடுகளில் பங்கு பெறுவதற்கு ஆர்வம் காட்டி வரும் சுமார் 20 நிறுவனங்களை மதிப்பீடு செய்து வருவதாக ஸ்டார்பக்ஸ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரையன் நிக்கோல், கடந்த ஜூலை மாதத்தில் கூறியிருந்தார்.
