22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

TATA செய்த தரமான சம்பவம்..

டைடன் நிறுவனத்தின் துணை நிறுவனமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சிக்னேச்சர் ஜூவல்லரி ஹோல்டிங் லிமிடெட் மாறியுள்ளது.

டைடனுக்கு சொந்தமான டைட்டன் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் FZCO மூலம் அதன் துணை நிறுவனமாக மாறியுள்ளது என பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது. துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டர் அக்டோபர் 9, 2025 அன்று இந்த பங்கு பரிமாற்றத்தைப் பதிவு செய்தது. இதற்கான முறையான அறிவிப்பை அக்டோபர் 27 அன்று டைட்டனிற்கு அனுப்பியுள்ளது.

வளைகுடா நாடுகளில் டமாஸ் நிறுவனத்தின் மொத்த நகை வணிகத்திற்கும் சிக்னேச்சர் ஜூவல்லரி ஹோல்டிங்ஸ் நிறுவனமாகச் செயல்படும். டைட்டன் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் FZCO நிறுவனம், டமாஸின் நகை விற்பனை பிரிவில் 67 சதவீதத்தை கையகப்படுத்த ஒப்புக்கொண்டதாகவும், மீதமுள்ள 33 சதவீத பங்குகளை டிசம்பர் 31, 2029 க்குப் பிறகு விதிமுறைகளுக்கு உட்பட்டு கையகப்படுத்தப்படும் என்றும் டைட்டன் நிறுவனம் ஜூலையில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

டைட்டன் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் FZCO, சிக்னேச்சர் ஜூவல்லரியின் மொத்த பங்குகளான, தலா $1 மதிப்புள்ள 1,000,000 சாதாரண பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த பங்குகளுக்கு உரிய தொகை இன்னும் செலுத்தப்படவில்லை. இந்த பங்கு பரிவர்த்தனை திட்டம் ஜனவரி 31, 2026 அன்று அல்லது அதற்கு முன்னர் நிறைவடையும் என்று டைட்டன் தெரிவித்துள்ளது.

டமாஸின் நகை வணிக பிரிவை நிர்வாகிப்பதற்காக, சிக்னேச்சர் ஜூவல்லரி நிறுவனம் நடப்பு ஆண்டில், DIFC, UAE இல் தொடங்கப்பட்டது. இந்த பங்கு பரிவர்த்தனைக்கு தற்போது எந்த அரசு அல்லது ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல்களும் தேவையில்லை என்று டைட்டன் தெளிவுபடுத்தியுள்ளது.

டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் பங்குகள் நேற்று பிற்பகல் 3 மணிக்கு NSE இல் ₹31.30 அளவுக்கு, அதாவது 0.84 சதவீதம் குறைந்து, ₹3,708.50க்கு வர்த்தகம் செய்யப்பட்டன