8 ஆண்டுகள் போராடி பெற்ற 1.6லட்சம் ரூபாய்..
தேசிய வாடிக்கையாளர் குறைதீர்ப்பு ஆணையமான NCDRC,வழக்கு ஒன்றில் எல்ஐசி நிறுவனம் 1லட்சத்து 60ஆயிரத்து 812 ரூபாய் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஜீவன் ஆரோக்கியா என்ற காப்பீட்டை நபர் ஒருவருக்கு ஹெர்னியா என்ற குடல் இறக்க அவசர மருத்துவ தேவை இருந்தது. அவரும் அதனை செய்துகொண்டார் ஆனால் எல்ஐசியில் இருந்து அவருக்கு வெறும் 17,100 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் செலவானது 2 லட்சத்து 16,827 ரூபாயாகும். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரின் மகள் NcDRCயில் வழக்கு தொடர்ந்தார். 8 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு. NCDRC நேற்று தீர்ப்பு வழங்கியது. அகர்தலாவைச் சேர்ந்த நபர் சென்னையில் சிகிச்சைபெற்றுக்கொண்டு அங்கு சென்று கேட்ட போது அங்குள்ள எல்ஐசி மேலாளர் இவ்வளவு தான் தரமுடியும் என்று வெறும் 17,100 ரூபாய் செலுத்தியுள்ளார். 2018 ஜனவரி 18ஆம் தேதி மாநில நுகர்வோர் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போதே 2.11 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 1.60 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. இதை எதிர்த்து NCDRCஇடம் எல்ஐசி புகாரை மேல்முறையீடாக அளித்தது. நீண்ட நெடிய போராட்டத்துக்கு பிறகு, பாதிக்கப்பட்டவரின் மகள் வாதிட்டதை கேட்ட தேசிய ஆணையம் , மாநில ஆணையம் தெரிவித்தபடி 1.60லட்சத்தை பாதிக்கப்பட்டவரின் மகளுக்கு அளிக்க ஆணையம் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.