1 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்…
இந்தியாவின் இரண்டாவது மதிப்பு மிக்க கம்பெனியான HDFCவங்கி , 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை ஒரே நாளில் பங்குச்சந்தைகளில் சந்தித்துள்ளது. . அதாவது 8.5% வரை அந்நிறுவன பங்குகள் சரிந்துள்ளன. 2020 மார்ச் 23 தேதிக்கு பிறகு மிகப்பெரிய சரிவை எச்டிஎப்சி நிறுவனம் சந்தித்துள்ளது. அதாவது சந்தை மூலதனத்தை 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒரே நாளில் இந்நிறுவனம் இழந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 11.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் எச்டிஎப்சி வங்கி பங்குகளை வாங்கலாமா? மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள எச்டிஎப்சி நிறுவன பங்குகளை வாங்கலாம் என்பதே நிபுணர்களின் பரிந்துரையாக உள்ளது. 2,010 ரூபாய் என்ற அளவில் பங்கு விலை வந்தால் தாராளமாக பங்குகளை வாங்கலாம் என்பதே ஜெப்ரீஸ் நிறுவனத்தின் பரிந்துரையாக உள்ளது. 33 விழுக்காடு அளவுக்கு வருமானம் வந்தாலும் கூட மிகப்பெரிய சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் இறுந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எச்டிஎப்சி வங்கி ரிவர்ஸ் மெர்ஜர் எனப்படும் பணியின் மூலம் 1 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் அதேநேரம் சென்செக்ஸில் 17 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.