தமிழ்நாட்டில் 1,000 கோடி முதலீடு செய்யும் பிரபல நிறுவனம்
செல்போன்களில் சமீப நாட்களாக கொரில்லா கிளாஸ் என்ற கண்ணாடிகள் இடம்பிடிப்பது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரில்லா கிளாஸ் உற்பத்தி செய்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாரத் இனோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசு மற்றும் அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதில் ஆப்டிமஸ் இன்பிராகாம் என்ற நிறுவனத்துடன் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் கூட்டாக இணைந்து முதலீடுகளை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரபல செல்போன் நிறுவனத்துக்கான முன்பக்க கொரில்லா கிளாஸ்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்தாண்டு செப்டம்பரிலேயே இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானபோதும், உற்பத்தி இப்போது தான் தொடங்கப்பட இருக்கிறது.சீனாவில் இருந்து பல மின்சார உதிரி பாக நிறுவனங்கள் வெளியேறும் நிலையில் இந்திய மின்னணு சந்தை 155 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. ஆப்பிள் செல்போன்கள் உள்ளிட்ட செல்போன்களின் உதிரி பாகங்களை செய்யும் தைவான் நிறுவனங்களான பாக்ஸ்கான், பெகட்ரான். பின்லாந்தின் சால்காம்ப் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அண்மையில் தமிழ்நாடு அரசு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 6.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை குவித்திருந்தன. தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய நிறுவனங்கள் மாருதி சுசுக்கி , டாடா குழுமம் மற்றும் அதானி குழுமத்தில் முதலீடுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.