ஸ்டீல் துறையில் 12,900 கோடி ரூபாய் முதலீடு..,

ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் என்ற பிரிவில் 12,900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை கிடைக்க இருக்கிறது. கடந்தாண்டு 57 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் வரும் 28 நிதியாண்டு வரை 29,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ளதைவிட 25 மெட்ரிக் டன் கூடுதல் ஸ்டீல் உற்பத்தி செய்யவும்,17000 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய ஸ்டீல் அமைச்சக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிறுவனங்கள் வரும் நிதியாண்டில் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் முதலீடும் செய்ய இருக்கிறது. உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின்கீழ் 5 யூனிட்டுகள் உற்பத்தியை தொடங்கியுள்ளன, 9 தொடங்க இருக்கின்றன. 2025ஆம் ஆண்டில் 10,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட உள்ளன.உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டாலும், அரசியல் சூழல் சரியில்லை என்ற நிலை வந்தாலும், இயற்கை பேரிடர்கள் மற்றும் சந்தை மாறுதல்கள் ஆகியவை வரும்போது சில தடங்கள்கள் வரலாம் என்று கூறப்படுகிறது.
பல்வேறு திட்டங்களை மேம்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய ஸ்டீல் அமைச்சகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் தொடர் சமூக உறவு உள்ளதாகவும் மத்திய ஸ்டீல் அமைச்சகம் தெரிவிக்கிறது.