134 பில்லியன் டாலர்கள் ஸ்வாஹா…
அமெரிக்க பங்குச் சந்தைகளில் பெரிய வீழ்ச்சி காணப்பட்டதால் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களை பெரிய சரிவை சந்தித்து உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அமேசான் மற்றும் உலகின் முதல் 10 முன்னணி நிறுவனங்களின் மதிப்பு தலா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு குறைந்தது. அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் சுமார் இரண்டு புள்ளி நான்கு விழுக்காடு அளவுக்கு சரிவு காணப்பட்டது. பேஸ்புக் ஓனர் மார்க், லாரி பேஜ் ஆகியோர் பெரிய இழப்பை சந்தித்தனர். பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் தனது வருவாயில் 252 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவை சந்தித்தார். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னணி பங்குச்சந்தைகள் குறிப்பாக டெக் நிறுவனங்கள் சார்ந்த பங்குச் சந்தைகள் பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசோவின் வட்டி குறைப்பு ஆகிய காரணங்களே இந்த டெக் நிறுவனங்கள் சர்வீஸ் சந்திக்க முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்காவின் பிரபல நிறுவனமான youtube ல் வருமானம் மிகவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அதன் மீது முதலீடு செய்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அனைத்திற்கும் மேலாக அமெரிக்க பங்குச் சந்தைகளில் சரிவும் அமெரிக்க வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.3% அதிகரித்துள்ளது இது கடந்த அக்டோபர் 2021 க்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய ஒரு சரிவாகும். டெக் பணியாளர்களின் வேலை நீக்கவும் இந்து சூழலை மேலும் சிக்கலாக்கி உள்ளது.