“டிசம்பர் வரை 15% ஏற்றுமதி வரி இருக்கும்”
தயார் நிலையில் உள்ள ஸ்டீல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் மத்திய அரசு 15 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்தது. இந்த வரி விகிதம் வரும் டிசம்பர் மாதம் வரை தொடர வேண்டும் என்று மத்திய அரசின் ஸ்டீல் பொருட்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திடீரென வரியை குறைத்தால் உள்நாட்டு சந்தையில் விற்பனை வீழ்ச்சியடைந்து ஏற்றுமதியில் அதிக கவனம் செல்லும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது
நடப்பாண்டு மழைக்காலத்திற்கு பிறகு உள்நாட்டு ஸ்டீல் தேவை அதிகரிக்கும் என்றும் அரசு கட்டமைப்புகள் அதற்குள் வலுவடைய உள்ளதாகவும், பொருட்களின் விலை பின்னாளில் உயரும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது
அடுப்புக்கரி மற்றும் இரும்புத்தாது உற்பத்தி விலையும் அதிகரிக்கும் என்பதால் உள்நாட்டில் ஸ்டீல் பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம் என்று ஸ்டீல் அமைச்சகம் கணித்துள்ளது
நடப்பு நிதியாண்டில் ஸ்டீல் உற்பத்தி 18 புள்ளி 37 மில்லியன் டன்களாக உள்ளதாகவும், இது அதிகபட்ச உற்பத்தி என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மெருகேற்றப்படாத ஸ்டீலின் அளவு 15 புள்ளி 3 விழுக்காடாக உள்ளதாகவும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஸ்டீலின் பங்கு 11புள்ளி 9 விழுக்காடாக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
ஏற்றுமதி வரியை அமல்படுத்தியதன் மூலம் உள்நாட்டில் ஸ்டீலின் விலை 10 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நடப்பாண்டின் ஜூன்-ஜூலை காலகட்டத்தில் ஸ்டீலின் ஏற்றுமதி 1 புள்ளி பூஜ்ஜியம் 2 மெட்ரிக் டன்னாக இருப்பதாகவும் இது கடந்தாண்டைவிட 65 விழுக்காடு குறைவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.