155 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட மின்சார பொருட்கள்
155 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட மின்சார பொருட்கள் உற்பத்தித்துறையில் ஆப்பிள் நிறுவனம் பெரிய வேலைவாய்ப்பை தரும் என்றும்,அதே போல் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏற்கனவே கடந்த 2006 முதல் நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சாரப் பொருட்கள் உற்பத்தி பாகங்களை தயாரிக்கும் நோக்கியா, சால்காம்ப், உள்ளிட்ட நிறுவனங்கள் நிறுவி பிரமிக்க வைத்தது தமிழ்நாடு,
இந்த நிலையில் கர்நாடகம் அல்லது உத்தரபிரதேசத்தை காட்டிலும் மின்சார பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. தற்போது தமிழ்நாடு மட்டும் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, முதலிடத்தில் உள்ளது. ஆப்பிளின் ஒப்பந்த ஊழியர்களின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. இந்திய மின்சார உற்பத்தியில் செல்போன்களின் அளவு மட்டும் 53 விழுக்காடாக இருக்கிறது. அண்மையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் இது தொடர்பாக அம்சங்கள் காட்சிபடுத்தப்பட்டன. அண்மையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.