ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் பத்தாது சார்..
அண்மையில் காக்னிசண்ட்டில் தொடக்க ஆண்டு சம்பளம் 2.5லட்சம் ரூபாயாக இருந்த சர்ச்சையை ஓயாத நிலையில் புதிய சர்ச்சை இணையத்தை கலக்கி வருகிறது. முதலீட்டாளரான சவுரவ் தத்தா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில்., ஆண்டுக்கு 25லட்சம் ரூபாயே பத்தாது என்று கூறியுள்ளார். ஆண்டுக்கு 25லட்சம் ரூபாய் சம்பளம் என்றால் ஒரு மாதத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வருகிறது. இதை வைத்து 3 பேர் கொண்ட ஒரு குடும்பத்தை எப்படி நடத்துவது என்று அவர் கேட்டுள்ளார். அடிப்படை தேவைகளாக ஒரு மாதத்துக்கு 1 லட்சம் ரூபாய் செலவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஈஎம்ஐ அடங்கும். திரைப்படத்துக்கு செல்வது, வெளியே சென்று சாப்பிடுவது இதற்கு 25 ஆயிரம் ரூபாயும், மருத்துவம் மற்றும் அவசர தேவைக்கு 25 ஆயிரம் ரூபாயும் சென்று விடுவதாகவும், கையில் மிச்சம் எதுவும் நிற்கவில்லையே என்றும் கேட்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் டெக் பணியாளர்களின் சம்பளம் 25 லட்சம் ரூபாய் ஓராண்டுக்கு போதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு முதலீட்டாளர் இப்படி பேசலாமா என்றும் பலர் அவரை விமர்சித்துள்ளனர். சாப்பாட்டுக்கும் ,மருத்துவ செலவுக்கு எப்படி மாதா மாதம் 25 ஆயிரம் வருகிறது என்றும் அவர்கள் கேலி செய்துள்ளனர். மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய்க்கு எப்பிடி வெளியே சென்று சாப்பிடுவீர்கள், படத்துக்கு போவீர்கள், மக்களை தேவையில்லாமல் குழப்பாதீர்கள் என்றும் பலர் அவரை கேலி செய்து வருகின்றனர். எந்த ஊரில் வசிக்கிறோம், எந்த தொழில் செய்கிறோம், வாழ்வியல் முறை உள்ளிட்டவை வருவாயையும் ,சேமிப்பையும் தீர்மானிப்பதாக பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்இ ரண்டாம் தர நகரங்களில் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகா என்றும், தேவையில்லாத செலவை எப்படி அடிப்படை செலவாக சேர்க்க முடியும் என்றும் பலரும் சவுரவை கிண்டல் செய்து வருகின்றனர்.