30 லட்சம் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை தேவை!!!
1982ம் ஆண்டு வெளியான மணல் கயிறு படத்தில் திருமணத்துக்கு 8 நிபந்தனைகள் விதிக்கப்படுவதைப் போல
நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கலியுக காலத்தில் பெண்ணுக்கு வரன் தேட மேட்ரிமோனி சைட்கள்
மிகவும் உதவிகரமாக உள்ளன. இந்த சூழலில் தனக்கு வரும் வாழ்க்கைத்துணை இப்படியெல்லாம் இருக்க வேண்டும்
என மணமகள் எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் இது வாழ்க்கைப்பிரச்சனை நிலைமை இப்படி இருக்க அண்மையில் திருமணத்துக்கு மாப்பிள்ளை தேடும் பெண் ஒருவர் தனது எதிர்பார்ப்புகள் பட்டியலில் , குறிப்பிட்ட இந்த நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதில் ஐஐடி மும்பை ,கவ்ஹாத்தி,மெட்ராஸ் உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனத்தில் எம்பிஏ,எம்டெக் ,எம்எஸ் அல்லது பிஜிடிஎம் படித்திருக்க வேண்டுமாம்.
அதுவும் 1992ம் ஆண்டுக்கு முன்பு பிறந்திருக்க வேண்டுமாம், ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பளம் வாங்க வேண்டுமாம். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் குறிப்பிட்ட பெண்ணை இணைய வாசிகள் கலாய்த்து வருகின்றனர். இவர் மாப்பிள்ளையை தேடுகிறாரா இல்லை பேங்கை தேடுகிறாரா என்றும் இது திருமணமா இல்லை நேர்காணலா என்றும் கலாய்த்து தள்ளியுள்ளனர். தேர்ந்தெடுப்பது அவரின் உரிமை என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்றும் பலர் புலம்பியுள்ளனர்.