விபத்தின்போது திறக்காத ஏர்பேக் 32லட்சம் அபராதம் விதிப்பு..
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் டொயோடோ கார் நிறுவனத்துக்கு 32 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சுனில் ரெட்டி என்பவர் ஆரம்பத்தில் தொடர்ந்த வழக்கில்தான் இத்தகைய தீர்ப்பை NCDRCவழங்கியிருக்கிறது. சுனில் ரெட்டி என்பவர் டொயோடா இன்னோவா வி எக்ஸ் டீசல் வகையைச் சேர்ந்த 7பேர் அமர்ந்து செல்லும் காரை கடந்த 2011 மார்ச் 11 ஆம் தேதி வாங்கியிருந்தார். புதிய கார் கடந்த ஆகஸ்ட் 16,2011-ல் ஆந்திர மாநிலம் கர்ணூலில் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து விபத்தின்போது காரின் ஏர் பேக் திறக்கவில்லை என்று வாகன உரிமையாளர் கார் வாங்கிய நந்தி ஷோருமில் போய் கேட்டுள்ளார். இதற்கு விபத்து பலமாக இருந்தால்தான் ஏர் பேக் திறக்கும் என்று மழுப்பலான பதிலை சொல்லியுள்ளனர். இந்த நிலையில் விடாமல் வழக்குத் தொடர்ந்த சுனில் விபத்தின் போது திறக்காத ஏர்பேக் விற்றது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிட்டார். 2014-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் சுனிலுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் அல்லது வேறு வாகனம் தரவேண்டும் என்றும் 9 விழுக்காடு வட்டி போட்டு தரவேண்டும் என்று ஆணையிட்டது. இதனை எதிர்த்து டொயோடா நிறுவனம் தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. அப்போது, இந்த விபத்து காரின் இடது பக்கத்தில்தான் நடந்தது எனவே இழப்பீடும் தரமுடியாது, அதே நேரம் அனுமதிக்கப்பட விதிகளின்படியே செயல்பட்டதாக மனசாட்சியுடன் இதற்கு பணம் தர முடியாது என்று தெரிவித்தது. நிபுணர்களின் கருத்தை கேட்ட நீதிபதி, உடனடியாக மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தவும் 13 ஆண்டுகளாக 15 லட்சத்துக்கு 9 விழுக்காடு வட்டி போட்டு தற்போது 32 லட்சம் ரூபாய் தர ஆணையிட்டுள்ளது. 13 ஆண்டுகள் போராடய சுனில் ரெட்டி உண்மையில் பாராட்டுக்கு உரியவர்