45 நாள்.. !!!! எல்லாம் முடிஞ்சது..!!!
பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சி அடுத்த 2 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.. இந்த சூழலில் பிரிட்டனின்பதவியாக கடந்த 6 வாரங்களுக்கு முன்பு அந்த கட்சியைச் சேர்ந்த லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார் அந்நாட்டில் தற்போது நிலவி வரும் பண வீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு நாட்டு மக்களை வதைத்து வருகிறது இதற்கு ஆளுங்கட்சியில் இருந்தே எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. அந்நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக 45 நாட்களில் பதவியை ராஜினாமா செய்வதாக லிஸ் டிரஸ் அறிவித்துள்ளார்
இந்த சூழலில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி புதிய பிரதமர் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளார்.
லிஸ் டிரஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளன
பிரிட்டன் வரலாற்றிலேயே மிகக்குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் என்ற நிலையை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.
பிரிட்டனின் புதிய நிதியமைச்சராக ஜெரிமி ஹண்ட் பதவியேற்றுள்ள நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் மீளும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உள்ள வரிசுமை குறையுமா என்று பிரிட்டன் மக்கள் எதிர்நோக்கி காத்திருப்பதால் பிரிட்டன் அரசியல்களம் சூடு பிடித்துள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார சிக்கலை சந்தித்துள்ள பிரிட்டனின் புதிய பட்ஜெட் வரும் 31ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.