“ஹைப்ரிட் கார்களுக்கு 48%,மின்சார கார்களுக்கு 5%வரி நீண்டகாலம் இருக்கும்”
இந்தியாவில் கடந்தாண்டு ஜி20 உச்சிமாநாட்டை நடத்திய அதன் ஷெர்பாவான அமிதாப்காந்த் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஹைப்ரிட் கார்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று டொயோடா,மாருதி சுசுகி நிறுவனங்கள் கோரிக்க பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் ஹைப்ரிட் வகை கார்களுக்கு 48%, மின்சார கார்களுக்கு 5 விழுக்காடு வரி நீண்ட காலத்துக்கு இருக்கும் என்றும் கூறினார். மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் தன்னிறைவு சார்ந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது அவரிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வியை முன்வைத்தனர். அதற்கு விளக்கம் அளித்த அமிதாப்காந், பேட்டரி உற்பத்திக்கு பெரிய திட்டங்களை மத்திய அரசு செய்து வருவதாக குறிப்பிட்டார். 2070 ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றாக 0 ஆக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள கார் உற்பத்தியாளர்கள் ஹைப்ரிட் கார்கள் உற்பத்திக்கு வரியை குறைக்கவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேநேரம் மின்சார கார் உற்பத்தியில் உள்ள டாடாமோட்டார்ஸ், ஹியூண்டாய்,கியா, மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் மின்சார கார்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அதிகபட்ச ஜிஎஸ்டி வரிவிதிப்பே 28 % ஆகத்தான் உள்ளது. எனினும் பிற செஸ் உள்ளிட்ட வரிகளையும் சேர்த்தால் ஒரு ஹைப்ரிட் காரின் வரி 48% வரை வருகிறது. அதே நேரம் ஜப்பானைச் சேர்ந்த டொயோடா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ஹைப்ரிட் கார்களின் விற்பனைக்கு வரியை குறைப்பது பற்றி அரசு தீவிர பரிசீலனையில் இருந்து வருகிறது.