முதல்வாரத்தில் 4,800 கோடி முதலீடு…
இந்திய பங்குச்சந்தைகளில் ஜனவரி முதல் வாரத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 4,800கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றனர். இந்திய பொருளாதார அடிப்படை மிகவும் வலுவாக இருப்பதாக நம்பப்படுவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிதியை கொண்டுவந்து கொட்டுகின்றனர். கடன் சந்தையிலும் 4,000கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவில் பொதுத்தேர்தல் வர உள்ள நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள். டிசம்பர்மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் 66,134 கோடி ரூபாய் முதலீடாக கிடைத்தன. இதே முதலீடு நவம்பரி்ல் வெறும் 9,000 கோடியாக மட்டுமே இருந்தது. 24 நிதியாண்டின் 2 ஆவது காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அட்டகாசமாக வளர்ந்துள்ளதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக ஆட்சியை பெரும்பாலும் கைப்பற்றியுள்ளது. இதுவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வரி குறைப்பு மற்றும் இந்திய தேர்தல் ஆகிய காரணிகளுக்கு முன்பாக பங்குச்சந்தையில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டில் வெளிநாட்டு முதலீடுகளாக 1.71 லட்சம் கோடி ரூபாய் ஈக்விட்டி வடிவிலும், கடன் சந்தை வடிவில் 68663 என்ற அளவிலும் உள்ளன. இந்த துறையில் சந்தை முதலீடாக 2.4 லட்சம் கோடி கிடைத்துள்ளது. 2022-ல் இந்த வெளிநாட்டு முதலீடு என்பது வெறும் 1.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது