அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 6 ஐடி ரூல்ஸ்..
அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சில வரும் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஆதார் அட்டை, எஸ்டிடி, டிடிஎஸ் ரேட், நேரடி வரி திட்டம், உள்ளிட்டவை நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டவை அதன்படி விவாத் சே விஸ்வாஸ் என்ற திட்டத்தின் மூலம் நிலுவையில் உள்ள மொத்த வரிகளையும் தீர்க்கும் முறை வரும் 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது. ஆதார் எண்ணை பயன்படுத்தாமல் ,ஆதார் என்ரோல்மன்ட் எண்ணை பயன்படுத்தும் புதிய திட்டமும் வரும் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது. இந்த முறையின் முலம் பேன் கார்டு விவரங்களை தவறாக பயன்படுத்துவது தடுக்கப்படும். பியூச்சர்ஸ் மற்றும் ஆப்சன்ஸ்களின் முதலீடு செய்திருந்தால் அதற்கு தனி வரியாக Stt வரி வசூலிக்கப்படுகிறது. இதேபோல் புளோட்டிங் டிடிஎஸ் திட்டமும் வரும் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது. 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் சென்றால் அதற்கு தனி வரியாக டிடிஎஸ் செலுத்த வேண்டும். ஐந்தாவதாக டிடிஎஸ் விகிதம் வரும் 1 ஆம் தேதியில் இருந்து மாற உள்ளது. ஆறாவதாக பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ளும் முறையும் வரும் 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது.