8.24 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை..
புதுப்புது நுட்பங்கள் வர வர அது சார்ந்த பணிகளுக்கு எப்போதும் அதிக மவுசு உண்டு. அந்த வகையில் அண்மையில் பேசுபொருளாகியுள்ள செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் ஆபிசர் பணிக்கு அண்மையில் பெரிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான சம்பளமாக இந்திய மதிப்பில் 8.24 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு அதிகாரி பணிகளை அக்சென்சர் மற்றும் ஜிஇ ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் எடுத்துள்ளனர். ஹெய்ட்ரிக் மற்றும் ஸ்ட்ரகுள்ஸ் என்ற நிறுவனம் அண்மையில் 300 மில்லியன் யூரோக்கள் செலவு செய்து அடுத்த 3 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுட்பங்களை கற்க முதலீடு செய்திருக்கிறது. உலகளவில் 10-ல் 8 நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு உள்ள தலைமை பதவியில் இருப்பவர்களை வேலைக்கு எடுக்கவே விரும்புகின்றனராம். ஒரு காலத்தில் மெட்டா வெர்ஸ் நுட்பம்தான் அடுத்த எதிர்காலம் என்று கருதி வந்த பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் கூட தற்போது ஜெனரேட்டிவ் ஏ.ஐ. நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.பேஸ்புக்கின் மெட்டாவெர்சுக்கு செலவு செய்வதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவில் அதிக தொகை செலவு செய்ய பெரிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.