8 லட்சம் கோடி புஸ்ஸ்ஸ்..பங்குச்சந்தையில் பெரிய சரிவு..
இந்திய பங்குச்சந்தைகள் ஹாங்காங் பங்குச்சந்தையை சந்தை மதிப்பில் மிஞ்சி உலகின் 4 ஆவது பெரிய பங்குச்சந்தையாக உயர்ந்தது. இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70 ஆயிரத்து 371 புள்ளிகளில் விழுந்தது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் 3 விழுக்காடு வரை சரிவு காணப்பட்டது. முதலீட்டாளர்களின் பணம் 8 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸின் சந்தை மூலதனம் 366.3 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
உலகளவில் நல்ல நிலையை நோக்கி பங்குச்சந்தைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் வங்கிகள் ,எண்ணெய் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. பங்குச்சந்தையில் பாதி சரிவுக்கு ரிலையன்ஸ் மற்றும் எச்டிஎப்சி நிறுவனமே காரணம் என்று கூறப்படுகிறது. மொத்த சரிவில் 3-ல் ஒரு பங்கை எச்டிஎப்சி நிறுவனம் கொண்டுள்ளது. இதனால் ஏற்கனவே சரிந்திருந்த அந்நிறுவன பங்ககளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் எச்டிஎப்சி நிறுவன பங்குகள் விலை 3 விழுக்காடு வரை சரிந்தது. ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் நிறுவன பங்குகள் சுமார் 6.5 விழுக்காடு பங்குகள் சரிந்தன. இதுமட்டுமின்றி பிஎன்பி, ஏயூ, மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் பங்குகள் பெரிதாக வீழ்ந்தன.
இதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய மதிப்புள்ள நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் மதிப்பு 2 விழுக்காடு வீழ்ந்தது.
எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் விலை 4 முதல் 6 விழுக்காடு சரிந்தன. செபியின் புதிய ஓனர்ஷிப் குறித்த அறிவிப்புகளும் இந்திய சந்தைகளை பின்னடைவை சந்திக்க வைத்துள்ளன. இந்திய பங்குச்சந்தையின் அடுத்த 6 மாத நிலையில் 1.5 முதல் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகள் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவை தவிர்த்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முதலீடுகளும் சரிந்துள்ளன. லாபத்தை பதிவு செய்ய பலரும் விரும்பியதால் இந்திய சந்தைகள் பெரிய இழப்பை சந்தித்தன. இந்திய பங்குச் சந்தையில் லாபத்தை பதிவு செய்ய அடுத்து வரும் நாட்களில் பெரிய பாதிப்பை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்