22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

90’s கிட்ஸ் – ன் ஃபேவரைட்டுக்கு வயது 30….

உலகளவில் பிரபலமான குழந்தைகளுக்கான வேடிக்கையான தொலைக்காட்சி கார்ட்டூன் நெட்வொர்க். இந்த தொலைக்காட்சியில் ஒரு முறையாவது கார்ட்டூன் பார்க்காத 90ஸ் கிட்ஸ்களே இருக்கமுடியாது என்று கூறலாம்,அந்தளவுக்கு இந்த தொலைக்காட்சி மிகவும் உலகம் முழுக்கவும் பிரபலமடைந்துள்ளது. இந்த நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க்கின் தாய் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், தங்கள் அனிமேஷன் ஸ்டுடியோ மற்றும் தொலைக்காட்சியை இணைக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஒரு வேலை கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுமோ என்ற அச்சம் பரவலாக நிலவியது. இந்த நிலையில் தங்கள் நிறுவனத்துக்கு வயது 30 என்று குறிப்பிட்டுள்ள கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம்,நாங்கள் செத்துப்போகவில்லை என்று தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது
எங்கேயும் ஓடிவிடவில்லை என்று கூறியுள்ள கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம், இன்னும் புதிதாக,பெரிதாக பல கார்ட்டூன்கள் விரைவில் உங்கள் இல்லம் தேடி வருகிறது என்றும் பதிவிட்டுள்ளது.
கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனத்தின் இந்த விளக்கம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளதால் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். வளர்ந்தாலும் மனதளவில் குழந்தைகளாகவே இருக்கும் இளைஞர்கள் சிலர் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *