கடன் தொல்லையில் இருந்து விடுபட்ட நிறுவனம்!!!
ரவி மற்றும் சாஷி ரூயியா ஆகியோர் இணைந்து உருவாக்கிய வியாபார சாம்ராஜ்ஜியம் எஸ்ஸார் குழுமம். ஒரு காலத்தில் பல
துறைகளில் கொடிகட்டி பறந்த இந்நிறுவனம் அண்மைகாலமாக பெரிய பாதிப்புகளை சந்தித்தது. நிபான் ஸ்டீல் மற்றும் அர்சிலார் மிட்டல் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டீல் தொழிலில் எஸ்ஸார் நிறுவனம் கூட்டாக வியாபாரம் செய்து வந்தது.
இந்த நிலையில் அதீத கடன் வாங்கியிருந்த எஸ்ஸார் குழுமம் , தங்கள் வசம் இருந்த தொலைதொடர்பு, உலோகம்,எண்ணெய் வளத்தில் சேர்த்த சொத்துகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் தனது கடனை அடைப்பதற்காக கூட்டு நிறுவனங்களான அர்கிலோர் மிட்டல் மற்றும் நிப்பான் ஸ்டீல்ஸிடம் தனது பங்குகளையே விட்டுக்கொடுத்துள்ளன. அதாவது இரண்டு துறைமுகங்கள் மற்றும் மின்நிலையத்தை எஸ்ஸார் நிறுவனம் கடன் பெற்ற நிறுவனங்களுக்கு எழுதி கொடுத்துவிட்டது. மொத்தம் 25 பில்லியன் டாலர் கடன் இருந்த நிலையில் வெறும் 2 பில்லியன் டாலருக்கு தனது துறைமுகங்களை எஸ்ஸார் எழுதிக் கொடுத்துவிட்டது. ஹசிரா பகுதியில் உள்ள எரிவாயு சக்தியால் இயங்கும் மின் உற்பத்தி மையம், மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தின் ஒரு பகுதியை எஸ்ஸார் நிறுவனம் இழந்துள்ளது. தற்போது இந்திய வங்கிகளில் எஸ்ஸார் குழுமத்தின் கடன் முற்றிலும் பூஜ்ஜியமாகியுள்ளது.