ஐஸ்கிரீமை தனியாக பிரிக்கும் பிரபல நிறுவனம்
வயது பேதமின்றி எல்லாருக்கும் பிடித்தமான உணவு ஐஸ்கிரீம். இந்த ஐஸே்கிரீம்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், தனது ஐஸ்கிரீம் வணிகத்தை மட்டும் தனியாக பிரிக்க முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக கடந்த புதன்கிழமை இந்துஸ்தான் யுனிலிவிர் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூடி ஆலோசித்தனர்.
அப்போது அந்த குழு ,ஐஸ்கிரீம்களை தனியாக வணிகம் செய்ய இசைவு தெரிவித்தனர். இந்துஸ்தான் யுனிலிவிரின் மொத்த வருவாயில், 3%மட்டுமே ஐஸ்கிரீம்கள் அளிக்கின்றன. இந்த வணிகத்துக்கு பெரிய முதலீடுகள் தேவைப்படுவதாகவும், மிக வேக வளர்ச்சியை ஐஸ்கிரீம் விற்பனை எட்டுவதாகவும் குழு ஆலோசனையில் தெரியவந்துள்ளது. ஐஸ்கிரீம் வணிகத்துக்கு என தனியான குளிர்சாதன வசதி கொண்ட கட்டமைப்பு தேவைப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்கிரீம் போலவே அழகுசாதன பொருட்கள், உணவுகள், சுகாதாரம் மற்றும் தனிநபர் ஆரோக்கியம் சார்ந்த பொருட்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதிக வளைந்துகொடுக்கும் திறமையுடன் வணிகத்தை மேற்கொள்ள இந்துஸ்தான் யுனிலிவிர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் ஐஸ்கிரீம் வணிகம் மட்டும் தனியாக பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.