இணைய தாக்குதலை சமாளிக்க புதிய திட்டம் தயார்….
இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பு செபி என்று அழைக்கப்படுகிறது, இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில்
பணம் எடுத்தல்,செலுத்துதல் என மிகச்சிரிய தரவுகளை கூட இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக மதாபி பூரி புச் என்பவர் தலைவராக உள்ளார். இந்த நிலையில் அண்மை காலமாக இணைய தாக்குதல்கள், ஹேக்கர்களின் தாக்குதல்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஒரு வித அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவியது.
நிலைமை இப்படி இருக்க, மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையை ஒன்றாக இணைத்து,இரண்டுக்கும் சேர்த்து
ஒரு பாதுகாப்பு அமைப்பை செபி உருவாக்கியுள்ளதாக மதாபி தெரிவித்துள்ளார்.இதன் மூலம் சைபர் தாக்குதல்கள் தவிர்க்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஐஐஎமில் பேசிய மதாபி,அனைத்து வகையான தரவுகளும் தனித்தனி சர்வர்களில் பதிவேற்றப்பட்டு அதனை பாதுகாக்கும் மிகத்தீவிரமான கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாகவும்,ஒருவேளை இணைய தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில் பங்கு வர்த்தக சேவை எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் வழக்கம் போல இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் புச் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய புச், பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர்களில் சிலர் தவறாக வழிநடத்துவதாகவும் கூறி வருத்தமடைந்தார்.