அமெரிக்காவிற்கு வருகிறது மந்த நிலை
அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரான ஜிம் ரோஜர்ஸ் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பொருளாதார மந்த நிலை விரைவில் அமெரிக்க சந்தையை தாக்க இருப்பதாக கூறினார். விரைவில் முதலீட்டாளர்களை மந்த நிலை தாக்க உள்ளது என்றார். பங்குச்சந்தைகள் தற்போது நல்ல நிலையில் இருந்தாலும் விரைவில் ஒரு பெரிய வீழ்ச்சி வரும் என்றும் அவர் கணித்துள்ளார். 2008ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க பங்குச்சந்தைகள் பெரியளவில் சரிவை சந்திக்கவில்லை என்று கூறிய அவர், அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ந்தால், மொத்த உலகமும் திடீர் சரிவை சந்திக்கும் என்றார். அமெரிக்க பங்குச்சந்தைகள் விழும் நேரத்தில் கையில் அதிக பணம் வைத்திருப்பதுதான் சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார். உலகளவில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அவர், ஏற்கனவே உலகளாவிய கடன் 35 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ல நிலையில் , கடினமான நேரத்தில் பணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சந்தையில் உள்ள நிலைமையை வேடிக்கை பார்த்திருந்து, அதன் பின்னர் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க சந்தைகள் சரிந்ததும், விரைவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும் ஜிம் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல்தான் இந்தாண்டின் மிக முக்கிய காரணியாக இருக்கும் என்றும், அதன் பிறகு மந்த நிலைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.