அட்டகாசமான ஏற்றம்…
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 19 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 281 புள்ளிகள் உயர்ந்து 72,708 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81புள்ளிகள் உயர்ந்து 22,122 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் Grasim Industries, Bajaj Finserv, Bajaj Auto, ICICI Bank, Cipla,ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Coal India, SBI Life Insurance, L&T, Wipro and HDFC Life.ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. தகவல் தொழில்நுட்பம், உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் நஷ்டத்தை பதிவு செய்தன. ACC, Aegis Logistics, Alkem Laboratories, BF Utilities, Castrol India, Container Corporation, CRISIL, Cummins India, Federal Bank, Hi-Tech Pipes, Indian Hotels, JBM Auto, KIOCL, MphasiS, MRPL, Novartis India, Paisalo Digital, Persistent Systms, Quess Corp, Rain Industries, Sonata Software, Supreme Petro, Wockhardt உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5800 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, கிராமுக்கு50 பைசா குறைந்து 77 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 500 ரூபாய் சரிந்து 77ஆயிரத்து500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.