அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் 20 % சரிந்துள்ள நிலையில், கவுதம் அதானி மற்றும் 7 நிறுவனங்கள் பிரச்சனையில் சிக்கியுள்ளன. இந்த நிலையில் புகாருக்கு ஆளான நிறுவனத்தின் பங்குகளைத்தான் 46லட்சம் பங்குகளை பெரிய பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடந்த மாதம் வாங்கியுள்ளன. அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் குவாண்ட் என்ற பரஸ்பர நிதி நிறுவனம் 66.61லட்சம் பங்குகள் வாங்கியுள்ளன. மேலும் இன்வெஸ்கோ பரஸ்பர நிதி நிறுவனம் 7.57லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்களின் பங்குகளை சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 5.68லட்சம் பங்குகள் வாங்கியுள்ளது. அதே நேரம் தன் வசம் வைத்திருந்த19.99லட்சம் அதானி பவர் நிறுவன பங்குகளை டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் விற்றுள்ளது. நிப்பான் இந்தியா பரஸ்பர நிதி நிறுவனம் ஏசிசியில் இருந்து கடந்த அக்டோபரில் முழுமையாக வெளியேறியது. நுமோரோ உனோ, தி பிக் மேன் உள்ளிட்ட ரகசிய குறியீடுகளை வைத்து தகவல் பறிமாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க சட்டத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விதிகளை மீறி 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன்கள் மற்றும் பத்திரங்களை அதானி கிரீன் எனெர்ஜி நிறுவனம் வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.