10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்களை அமைக்கிறது அதானி குழுமம்
அதானி குழுமமும் அமெரிக்க நிறுவனமான connex நிறுவனமும் இணைந்து இந்தியாவில் data centres எனப்படும் தரவு மையங்களை அமைக்க உள்ளன. இவ்வகை தரவு மையங்கள் இயங்க தேவைப்படும் மின்சார அளவை வைத்து வகை படுத்த படுகிறது. தற்போது இந்தியாவில் 550மெகாவாட் data centre மட்டுமே உள்ளன.
இந்த சூழலில் அடுத்த 10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்கள் அமைக்க பணிகள் நடப்பதாக அதானி connex நிறுவன துணைத்தலைவர் சஞ்சய் புதானி அறிவித்துள்ளார். இந்த மையங்கள் இந்தியாவில் சென்னை, மும்பை, புனே, ஐதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக அமைய உள்ளன.இதற்காக கடலுக்கு அடியில் கம்பிகள் அமைக்கப் பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதல்கட்ட பணிகள் 450மெகாவாட் அளவிலும். இரண்டாம் கட்டத்தில் 550மெகா வாட் பணிகளும் நடக்க உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் ஹப் ஆக மாற்றும் முயற்சியாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.