அம்பானியை மிஞ்சிய அதானி…
IIFL wealth hurun india நிறுவனம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியை கவுதம் அதானி மிஞ்சியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தினசரி அதானியின் வருமானம் ரூ.1612 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது
அந்த நிறுவனத்தின் தரவுகளின்படி கவுதம் அதானியின் சொத்துமதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது . இந்த அளவு அம்பானியின் சொத்து மதிப்பை விட 3 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும். பங்குச்சந்தைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 7 நிறுவனங்களை வைத்துள்ள ஒரே இந்தியர் என்ற சாதனையையும் அதானி நிகழ்த்தியுள்ளார். கடந்த 10 வருடங்களாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையுடன் வலம் வந்த முகேஷ் அம்பானி தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அம்பானியின் சொத்துமதிப்பு தற்போது 7 லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி மற்றும் அம்பானியின் பங்கு மட்டும் 59 விழுக்காடாக உள்ளது
கடந்த 2012ம் ஆண்டு அதானியை விட அம்பானி மிகவும் பணக்காரர் ஆக இருந்தார். தற்போது 10 ஆண்டுகள் இடைவெளியில் அம்பானியை விட 3 லட்சம் கோடி அதிகம் சம்பாதித்து உள்ளார் அதானி. இந்த பட்டியலில் முதல் இடத்தில் அதானியும், இரண்டாம் இடத்தில் அம்பானியும், மூன்றாம் இடத்தில் சைரஸ் பூனாவாலாவும் உள்ளனர் . நான்காம் இடத்தில் ஹெச் சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார்.