அதானியின் கவனத்தை ஈர்த்த குவால்காம் நிறுவனம்..
பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் பார்வையில் குவால்காம் நிறுவனத்தின் கொள்கைகள் சிறப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அரைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மற்ற முன்னணி தொழில்கள் அதானியை வெகுவாக கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. குவால்காம் நிறுவன சிஇஓவை கவுதம் அதானி நேரில் சந்தித்தும் இது தொடர்பாக பேசியுள்ளார். அரைகடத்தி நுட்பத்தில் இந்தியா இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கின்றது. 2023 ஒப்பந்தத்தின்படி அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் குஜராத்தின் சனாந்த் பகுதியில் அரைக்கடத்தில் ஃபேப்ரிகேஷன் ஆலையை தொடங்க இருக்கிறது. இது இந்திய அளவில் மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட ஆலையை கட்டும் பணியில் 5,000 பேர் ஈடுபட்டுள்ளதாக பிரபல அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ஆலை இந்தாண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்நிறுவனம் இந்தியாவில் 22.500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை செய்கிறது. குறிப்பிட்ட ஆலை பயன்பாட்டுக்கு வந்தால் மின்சாதனம் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் உற்பத்திக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இவை மட்டுமின்றி குஜராத்தில் மேலும் 2 அரைக்கடத்தி யூனிட்டுகளும் அதேபோல் அசாமில் ஒரு ஆலையை நிறுவவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரிலேயே 76,000கோடி ரூபாய் அளவில் இதற்கென பட்ஜெட் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.