22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

அதானியின் ஆருடம்!!!

உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள முக்கிய வியாபாரியாக உள்ளவர் கவுதம் அதானி இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் 2030ம்ஆண்டுக்குள் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடும் என்று
தெரிவித்துள்ளார். 2050ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராகும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கூடுதலாக இந்திய உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார். உலகமே கொரோனா பெருந்தொற்று, உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட காரணிகளால் அவஸ்தை பட்டு வரும் நிலையில் இந்தியா மட்டும் 15% வளர்ச்சியை காட்டி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மாற்றத்தக்க எரிபொருள் துறையில் கிரீன் ஹைட்ரஜன், சோலார் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி வருங்காலத்துக்கு மிகவும் அதிகம் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட இந்தியாவுக்கு 58 ஆண்டுகளும், அடுத்த டிரில்லியன் பொருளாதாரத்தை 12 ஆண்டுகளிலும், 3வது டிரில்லியன் பொருளாதாரத்தை அடுத்த 5 ஆண்டுகளிலும் எட்டி இந்தியா வியக்க வைப்பதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *