பாமாயில் இறக்குமதி குறைப்பால் பாதிப்பு..
இந்தியாவுக்கு மலேசியாவில் இருந்துதான் பெரும்பாலான பாமாயில் வருகிறது. இந்நிலையில் கடந்த 9 மாதங்களில் இல்லாத வகையில் தொடர்ந்து 4 ஆவது முறையாக பாமாயில் விலை குறைந்திருக்கிறது. ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து காய்கனி எண்ணெயை வாங்குவதை படிப்படியாக இந்தியா குறைத்து வருகிறது. இதனால் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலின் மதிப்பு அந்நாட்டு பணத்தின்படி 18 ரிங்கிட் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது ஒரு மெட்ரிக் டன் பாமாயில் 799 அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பதிவான இறக்குமதி என்பது மே மாதத்துக்கு பிறகு குறைவானதாகும். உள்ளூரிலேயே சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் சமையல் எண்ணெய்கள் இறக்குமதி குறையத் தொடங்கியுள்ளது. இதேபோல் சோயா ஆயில் விலையும் 1.19 %குறைந்திருக்கிறது. சிகாகோ அடிப்படையிலான சந்தையில் சோயாவின் விலை 0.46%குறைந்திருக்கிறது. இதேபோல் சீனாவில் நிலவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவுற்றன. கொண்டாட்டங்கள் நிறைவுற்ற நிலையில் சீனர்களுக்கு காய்கனி எண்ணெய்கள் தேவை குறைந்திருக்கிறதாம். மலேசியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாமாயிலின் அளவு என்பது 1.17மில்லியன் டன்னாக உயர்ந்திருக்கிறது. இந்த ஏற்றுமதி என்பது டிசம்பரை விட 0.19 மில்லியன் டன் அதிகமாகும். இன்னும் சில தனியார் மலேசிய நிறுவனங்களின் பாமாயில் ஏற்றுமதி என்பது டிசம்பரில் 9.4 விழுக்காட்டில் இருந்து 6.7விழுக்காடாக சரிந்திருக்கிறது. ஒரு மெட்ரிக் டன் பாமாயில் என்பது 3771 ரிங்கிட் என்ற அளவில் ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.