தேர்தலுக்கு அப்புறம் விலையை ஏற்றும் ஏர்டெல்..
இந்தியாவில் பொதுத்தேர்தல் முடிந்த உடன் விலையை உயர்த்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் ஜியோ நிறுவனம் டேட்டா பயன்பாட்டை மக்களுக்கு அதிகம் அளிக்க திட்டமிட்டுள்ளது.
அதிக தொகை கொண்ட ரீசார்ஜ் திட்டங்களால் பலரையும் கவர ஜியோ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அக்டோபர் மற்றும் டிசம்பர் காலகட்டத்தில் இரண்டு நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல்போட்டிகள் நடப்பதால் ஜியோவின் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஜியோ பைபர் பிராட்பேண்டு திட்டங்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் ஜியோ பைபர் சேவையை மக்கள் பெரிதும் பரிந்துரைக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 37.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. சராசரியாக ஏர்டெல் நிறுவனம் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 208 ரூபாய் வசூலிக்கிறது. ஜியோ 182 மற்றும் வோடபோன் சராசரியாக 145 ரூபாய் வசூலிக்கிறது.
ஜூலை முதல் அக்டோபர் காலகட்டத்தில் 15 விழுக்காடு வரை விலையேற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோவும், ஏர்டெலும் இணைந்து சந்தை பங்களிப்பில் 82 வி்ழுக்காடு செய்கின்றன. மீதம் 18.5 விழுக்காட்டை வோடபோன் ஐடியா அளிக்கிறது. ஜியோவின் சந்தை மதிப்பு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 46 விழுக்காடாக உள்ளது இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த 2022-ல் இந்த விகிதம் 41.6 விழுக்காடாக உள்ளது. இதேபோல் அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் ஏர்டெலின் பங்களிப்பு 33.5 விழுக்காடாக உயர்ந்தது. கடந்த 2022 காலகட்டத்தில் 31.2 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது