அலெக்சா!!!! உன் பக்கத்தில் இருப்பவரை வேலையை விட்டு அனுப்பவும்….
ஆன்லைனில் ஷாப்பிங் செய்யாத மனிதன் அறை மனிதன் என்று சொன்னாலும் சொல்லும் அளவுக்கு தற்போது ஆன்லைன் வணிகம் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனங்கள் ஏற்றம் பெற்ற வேகத்தில் சரிவை சந்தித்து வருகின்றனர். இதில் குறிப்பாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனம் தனது பணியாளர்களில் 10 ஆயிரம் பேரை இந்த வாரம் நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அலெக்சா பிரிவில் உள்ள பணியாளர்களின் பெயர்களுக்குத்தான் முதலில் கத்தி வீசப்படுவதாகவும் மனிதவள மேம்பாட்டுப்பிரிவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை அமேசான் நிறுவனத்தில் மட்டும் 16 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடும் நிதி நெருக்கடி காரணமாக புதிதாக ஆட்களை தேர்வு செய்வதை அந்த நிறுவனம் நிறுத்துவாக அண்மையில் அறிவித்துள்ளது.
மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாலும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு காரணமாகவும் ஆன்லைன் ஷாப்பிங் பக்கம் மக்கள் திரும்பும் அளவு குறைந்துள்ளது. அமேசான் நிறுவன பங்குகள் இந்த ஓராண்டில் மட்டும் 40 விழுக்காடு மதிப்பு சரிந்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் அந்நிறுவன பங்குகளின் விலை 98.38 டாலராக சரிந்துள்ளது. இந்த அளவு முன்தின வர்த்தகத்தை விடவும் 2.4% குறைவாகும்.