சேவைகள் எல்லாம் 15 ஆம் தேதிக்கு அப்புறம் கிடைக்காது
பல்வேறு புகார்கள் காரணமாக பேடிஎம் பேமண்ட் வங்கி வரும் 15 ஆம் தேதி முதல் இயங்காது என்ற நிலையில்,எந்தெந்த சேவைகள் பாதிக்கப்படும் என்று பார்க்கலாம் வாங்க. பேடிஎம் பேமண்ட் வங்கியில் உள்ள பணத்தை உங்களால் எடுக்க முடியும்,அதுவும் எவ்வளவு பணம் பேடிஎம் பேமண்ட் வங்கியில் இருக்கிறதோ அவ்வளவு மட்டுமே உங்கள் வங்கிக்கணக்குக்கு மாற்றிக்கொள்ள இயலும். கேஷ்பேக், ரீஃபண்ட்கள் கிடைக்கும். மார்ச் 15க்கும் பிறகு தானாக வங்கிக்கணக்கில் இருந்து மின்சார பில் லுக்கு எடுக்கப்படும் கட்டணங்கள் எடுத்துக்கொள்லப்படும், புதிதாக டெபாசிட்கள் மட்டும் செய்ய இயலாது. எனவே இதற்கு ஏற்ப மாற்று வழிகளை செய்துகொள்ள அந்த வங்கி ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
ஓடிடி தளங்களுக்கு செலுத்த வேண்டிய சந்தா அனைத்தும் செலுத்த முடியும். மாதாந்திர லோன் ஈஎம்ஐ 15 ஆம் தேதிக்கு பிறகு தானாக கழித்துக்கொள்ளப்படும் அதே சமயம் புதிதாக பேடிஎம் பேமண்ட் வங்கியில் பணத்தை செலுத்த இயலாது.
வாலட்டில் உள்ள பணத்தை வங்கிக்கணக்குக்கு மாறிக்கொள்ள இயலும்.அதேபோல் 15 ஆம் தேதிக்கு பிறகும் கூட பேடிஎம் ஃபாஸ்ட் டேகில் உள்ள பணத்தை பயன்படுத்தலாம் ஆனால் புதிய பேலன்ஸ் டாப் அப் செய்ய இயலாது. வேறொரு நபரிடம் இருந்து பணத்தை பெறலாம் ஆனால் டெபாசிட் செய்ய இயலாது.சேலரி கிரிடிட் கிடைக்காது. நேரடி வங்கி பணவரவு இனி பேடிஎம் பேமண்ட் வங்கியில் கிடைக்காது. பேடிஎம் பேமண்ட் வங்கிக்கு வரும் 15 ஆம் தேதிக்கு பிறகு பணம் செலுத்த இயலாது.