அம்பானியின் அடுத்த அதிரடி!!!
இந்தியாவில் தொலைதொடர்பு சந்தையில் சக்கைபோடு போட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த கட்டமாக குறைந்த விலை லேப்டாப்களை விற்க திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜியோ நிறுவனம் வெறும் 81 டாலர் மதிப்பில் புதிய ஜியோபோனை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் ஜியோபுக் என்ற பெயரில் புதிய லேப்டாப்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது.
இந்த லேப்டாப்களின் உள்ளேயே 4ஜி சிம்கார்டு வசதி இருக்கும், இந்தமாத இறுதியில் பள்ளிகள் மற்றும் அரசு அமைப்புகளில் இந்த லேப்டாப்கள் முதலில் கிடைக்கும் வகையில் ஜியோ நிறுவனம் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
அடுத்த 3 மாதங்களில் பொதுமக்களும் வாங்கிக்கொள்ளும் வகையில் சந்தயில் ஜியோபுக் கிடைக்க உள்ளது.
இதனைத் தொடர்ந்து 5ஜி வசதியுள்ள ஜியோபோனையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஜியோபுக் லேப்டாப் ஜியோ ஓஎஸ் இயங்குதளத்தில் இயங்க உள்ளது.குவால்காம் நிறுவனத்தின் சிப் இந்த லேப்டாபில் இடம்பிடித்திருக்கும்.
ஏசர்,லெனோவா,லாவா நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த லேப்டாப்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லேப்டாப் சந்தையில் டெல் மற்றும் ஹெச்பி நிறுவனங்கள் பெரிய இடத்தை பிடித்துள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் ஆயிரக்கணக்கான லேப்டாப்களை விற்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டேப்லெட்கள் கிடைக்கும் விலையிலேயே லேப்டாப்கள் கிடைக்க உள்ளது, பல நிறுவன ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது