4 ஆண்டுகளில் முதல் முறையாக…
விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி கடுமையாக உயர்த்தியது. இதனால் பல நிறுவனங்கள் கடன் வாங்க முடியாமல் தங்கள் வணிகத்தை வேகமாக மூடவிட்டு நடையை கட்டினர். இதனால் வேலையிழந்தோரின் அளவும் கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த சூழலில் 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை இன்று குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசியும் உயரக்கூடாது ஏதேநேரம் அதேநேரம் வேலைவாய்ப்புகளும் உருவாக்க வேண்டும் என்ற இரண்டு அம்சங்களை மனதில் வைத்துத்தான் இந்த வட்டி விகித குறைப்பு அமலாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு வட்டி விகிதம் குறைக்கப்படுவதால் அது அரசியல் ரீதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, அமெரிக்காவில் 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை கடன்கள் மீது வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 2022-ல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், உக்ரைன் போர் சமயத்திலும் உயர்த்தப்பட்ட இந்த வட்டி விகிதம் தற்போது வரை 5.50 %ஆக உள்ளது. இது கடந்த 14 மாதங்களாக உள்ள அதிகமாகும். தற்போது 25 அல்லது 50 அடிப்படை புள்ளிகளை குறைத்தால், அது வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு பேருதவியாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாகும். 2025 முடிவதற்குள் 4 முறை வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைக்கப்படும் வட்டி விகிதத்தால் அமெரிக்க கடன் வட்டிவிகிதம் 3 முதல் 3.75 % ஆக குறைய அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.