பணமதிப்பு குறைவால் ஏற்றுமதி அதிகரிப்பா?
அமெரிக்க டாலரை மையப்படுத்தியே உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் வணிகத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்ததால் உள்ள நிறை குறைகள் பற்றி ரிசர்வ் வங்கி அண்மையில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் இந்திய பணத்தின் மதிப்பு குறைந்ததால் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலைக்கு ஆங்கிலத்தில் ரியல் எஃபெக்டிவ் எக்ஸ்சேஞ்ச் ரேட் REER என்று பெயர். இந்தியாவின் REER விகிதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே வருவதால் இறக்குமதி செய்வது அதிக செலவு பிடிப்பதாகவும், வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதிக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரியவந்தது. REER-ல் இரண்டு வகையான குறியீடுகள் உள்ளன. ஒன்று 40 கரன்சி, மற்றொன்று 6 கரன்சி முதல் வகையில் தற்போது 88விழுக்காடும், இரண்டாம் வகையில் 40 %உம் வணிகம் நடக்கிறது. 6 கரன்சி தொகையில் அமெரிக்க டாலர், சீனா ரென்மின்பி ஆகியவை 28%ஆக இருந்தன. யூரோவின் மதிப்பு 26%ஆகவும், ஹாங்காங்க்-8, பிரிட்டன் பவுன்டு மற்றும் ஜப்பானிய யென் ஆகியவையின் மதிப்பீடு அல்லது எடை தலா 5%ஆக இருந்தது. 6 கரன்சி பிரிவில் இந்தியாவின் உடைகள் 43% ஏற்றுமதியும், 37%இறக்குமதியும் செய்யப்பட்டது. கடந்த 2012-2013ல் இந்த விகிதம் 33%ஆக இருந்த நிலையில் தற்போது இது 43%ஆக உயர்ந்துள்ளது.