இன்னும் தொடர்கிறது தாண்டவம்!!!!
டிவிட்டர் நிறுவனத்தை பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அவர் செய்தி இடம் பெறாத நாளே
இல்லை என்ற அளவுக்கு அத்தனை மாற்றங்களை மஸ்க் செய்து வருகிறார். அண்மையில், இந்தியர்களில் 90 % பேரை டிவிட்டர் நிறுவனம் பணிநீக்கம் செய்ததுடன், மொத்த பணியாளர்களில் 50 % பேரையும் நிரந்தரமாக பணியில் இருந்து தூக்கி வீசினர். முழுநேர பணியாளர்களுக்கே பணி பாதுகாப்பு இல்லாத சூழலில் ஒப்பந்த ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்படும் சூழலில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 4 ஆயிரத்து 400 ஊழியர்களையும் நீக்கி டிவிட்டர் அறிவித்துள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 500 பேர் இருந்த இடத்தில் தற்போது ஆயிரத்து 100 பேர் மட்டுமே ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டனர். எந்த வித அறிவிப்போ,ஒப்பந்த ஊழியர்களுக்கு நோட்டீசோ இல்லாமல் பணியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அதிலும் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் பணி பாணியே மாற உள்ள நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு காரணம் கூறப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் பயன்படுத்துவோருக்கு புதுவித அனுபவத்தை தர அசுரத்தனமான மாற்றங்கள் டிவிட்டர் நிறுவனம் செய்து வருகிறது. இதன் காரணமாக பழைய பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.