ஹிண்டன்பர்க் வழக்கில் மேல்முறையீடு..
பிரபல தொழிலதிபர் அதானியின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துப்பார்த்த ஹிண்டன்பர்க் அறிக்கை, வணிக ரீதியில் மட்டுமின்றி, அரசியல் ரீதியிலும் பல்வேறு கருத்துகளை கிளப்பியது. இது தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள்விசாரித்து வந்தாலும், பெரிய பாதிப்பு இல்லை என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அனாமிகா ஜெய்ஸ்வால் என்பவர் ஜனவரி 3 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இருப்பினும் செபி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. செபி தனது விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மொத்தம் 24 பேர் கொண்ட குழுவில் 22 பேர் தங்கள் விசாரணைகளை முடித்துள்ளனர். வெளிநாட்டு விதிகள் மிறப்பட்டுள்ளனவா, நிறுவனங்களை வேறு நிறுவனங்கள் வாங்கியுள்ளவா போன்ற அம்சங்கள் இந்த விசாரணையில் இடம்பிடித்துள்ளன. செபி விசாரணை இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மனுதாரர், அதற்குள் எப்படி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம் என்பதுதான் அனாமிகாவின் வாதமாக இருக்கிறது. அதானி குழுமம் விதிமீறலில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
அதானி குழும நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் மத்தியகிழக்கு மறறும் அமெரிக்காவில் இருந்தும் நிதி அதிகளவில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. புகாருக்கு ஆளான அதானி குழும் புகாருக்கு முன்பு இருந்த செல்வாக்கை விட 60 பில்லியன் அமேரிக்க டாலர் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது