முதலிடத்தை இழந்தது ஆப்பிள்..
பந்தாவுக்கான பிராண்டாக பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனபோன்களும், ஸ்மார்ட் வாட்ச்களும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் பிரபலமானவை. இந்த நிலையில் ஐடிசி நிறுவனம் உலகளாவிய கைகடிகாரங்கள் தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி, சீன நிறுவனமான ஹுவாவே முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹுவாவே வாட்ச்சில் ஜிடி5, ஜிடி 5 புரோ ஆகிய புதிய இரண்டு தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உடல்நலனை பாதுகாக்கும் செயலிகள்,மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. லத்தீன் அமெரிக்கா, ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு நாடுகளிலும் தனது கிளையை ஹுவாவே நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஹுவாவே நிறுவனத்தின் பங்குகள் எடுபடவில்லை. ஆப்பிளில் சீரிஸ் 10 ரக ஸ்மார்ட் வாட்ச் விற்பனையும் மூன்றாவது காலாண்டில் வேகமெடுத்துள்ளது. உலகளாவிய சந்தையில் ஐடிசி அறிக்கையின்படி, சீனா மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. சீனாவில் மட்டும் 20%அளவுக்கு கையில் கட்டும் டிஜிட்டல் சாதனங்களின் வளர்ச்சி உள்ளது. ஸ்டைலான டிசைன்களிலும் சீன தயாரிப்புகள் சிறப்பான அம்சங்களுடன் களமிறங்கியுள்ளன. ஆப்பிளுக்கு போட்டியாக ஹுவாவே மட்டுமின்றி, ஜியோமி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களும் ஸ்மார்ட் வாட்ச் திட்டங்களில் சவாலான போட்டியை அளித்தனர்.
சியோமியின் 9 மற்றும் எஸ் ரக வாட்ச்கள் குறைவான விலை ஆனால் அதே நேரம் சிறப்பான பயன்பாடுகளை கொண்டுள்ளது.
அதே நேரம் சாம்சங் அதிக விலை மற்றும் பட்ஜெட் மாடல்களை தயாரித்து வருகிறது.