129 பில்லியன் டாலரை இழந்த ஆப்பிள் நிறுவனம்…
உலகிலேயே அதிக மதிப்புமிக்க நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்காவில் எப்போதும் முக்கிய பேசுபொருளாகவே இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவன பங்குகள் குறித்து பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் நாஸ்டாக் அமைப்புகள் நிலை அறிக்கை வெளியிட்டன.
அதில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் மதிப்புகள் சரிந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் மூலதன பங்குகளில் 120 பில்லியன் டாலர்கள் சரிந்துள்ளன.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளால் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் ஆட்டம் கண்டுள்ளன.
அமேசான்,ஆல்ப்பெட் நிறுவன பங்குகளின் விலை 3% வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தைப் போலவே பிரபல மெட்டா நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
மெட்டா நிறுவனத்தின் பங்குகள் நடப்பாண்டு மட்டும் 59 % வீழ்ச்சியடைந்துள்ளன, மேலும் மெட்டா நிறுவனத்தில் முதல்முறையாக ஆட்குறைப்பு நடத்த உள்ளதாக அந்த நிறுவன நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் அந்த நிறுவன பங்குகள் மேலும் 3.7% குறைந்துள்ளன.
உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு நடப்பாண்டில் மட்டும் 20 % வீழ்ந்துள்ளது. சில நாடுகளில் ஆப்பிள் நிறுவன பங்குகளும், ஆப்பிள் நிறுவன பொருட்களும் வரவேற்பு குறைந்துள்ளதாக பல அமைப்புகளும் கணித்துள்ளதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு சிக்கலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது
அமெரிக்க பெடரல் ரிசர்வின் நடவடிக்கைகளால் வரும் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்கள் 6% வரை சரிவை சந்திக்கலாம் என்று கணிக்கப்படுகிறது