Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஐடிசிக்கு கிடைத்த ஒப்புதல்..

ஐடிசி நிறுவனம் தனது ஹோட்டல் பிரிவை தனியாக நடத்த தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேற்குவங்க நிறுவனங்களின் பதிவாளர் உள்ளிட்டோரின் முன்னிலையில் விரைவில் இது தொடர்பான பணிகள் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. சிகரெட் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை விற்று வரும் ஐடிசி நிறுவனம், தனது ஹோட்டல் பிரிவு வணிகத்தை தனியாக நடத்த 2023 ஆகஸ்ட்டில் முடிவெடுத்தது. ஐடிசியில் இருந்து ஹோட்டல் வணிகம் தனியாக சென்றாலும், அதில் 60% ஐடிசி பங்குதாரர்களுக்கு செல்லும், மீதமுள்ள 40%பங்குகள் ஐடிசி வசமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐடிசி நிறுவனத்தில் இருந்து உணவக பிரிவு மட்டும் தனியாக செல்வதற்கு ஐடிசி பங்குதாரர்கள் கடந்த ஜூனில் ஒப்புதல் அளித்தனர். இதற்கு தற்போது அரசாங்கமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுமட்டுமின்ற இந்திய போட்டி ஆணையமும் பிரிவுக்கு கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. வேகமாக வளர்ந்து வரும் ஹோட்டல் துறையை தனியாக நடத்த திட்டமிட்டே பிரிவு நடந்ததாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஐடிசி நிறுவன பங்குகள் 1.56% குறைந்து ஒரு பங்கு 504.75 ரூபாயாக விற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *