7.8லட்சம் கார்கள் விக்கலயா…?
ஆட்டோமொபைல் விற்பனை செய்யும் கூட்டமைப்பான FADA ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் பயன்படுத்தும் பயணிகள் வாகன விற்பனை மிகப்பெரிய அளவில் தேங்கி கிடப்பதாக கூறியுள்ளது. 70-75 நாட்களாக விற்காத கார்கள் என்று 7.8லட்சம் கார்களை அந்த அமைப்பு கணக்கில் காட்டியுள்ளது. இதன் மதிப்பு மட்டும் 77,800 கோடி ரூபாயாகும். கார்களை கொண்டுவந்து உற்பத்தியாளர்கள் இறக்கிக்கொண்டே இருப்பதாகவும் அதே நேரம் , கார்கள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 4.53%ஆகவும் கார்கள் விற்பனை சரிந்து இருக்கிறது. அதிகளவு மழை மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கார் வாங்க ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் கார்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இதே அமைப்பு கடந்த ஜூலை மாதம் 7லட்சத்து 30 ஆயிரம் கார்கள் விற்கவில்லை என்று கூறியிருந்தது. இந்த நிலையில் மாருதி சுசுக்கி நிறுவனம் தனது கார்களை விற்காமல் இருக்கும் நாட்கள் 38-ல் இருந்து 36 ஆக குறைந்துள்ளதாக கூறியுள்ளது. பைக் மற்றும் 3 சக்கர வாகனங்களைத் தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதாகவும், கார்கள் டிராக்டர்கள் விற்பனை பெரிய அளவில் சரிவை சந்தித்து வருவதாகவும் FADAஅமைப்பு தெரிவித்துள்ளது. அதீத மழையால் பல இடங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் விளைச்சல் பாதித்து பலர் நஷ்டமடைந்துள்ளதால் கார்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கணேச சதுர்த்தி, ஓணம், நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் நகரங்களில் வரும் நாட்களில் கார்கள் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.