இப்பதான் இதையே பண்றீங்களா???
இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்தின் தரவுகளை பார்கோடு வடிவில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. உற்பத்தி லைசன்ஸ்,பேட்ச் எண் உள்ளிட்ட விவரங்களை பார்கோடு வடிவில் தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளனர். 1945ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் மருத்துவ பொருட்கள் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றம் அடுத்தாண்டு மே மாதம் அமலுக்கு வர உள்ளன போலியான மருந்துகளை அடையாளம் காணவே இந்த புதிய முறை கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்கோடை ஸ்கேன் செய்தால் மருந்தின் பெயர்,அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர்,இந்த மருந்து எப்போது காலாவதியாகும் உள்ளிட்ட விவரங்களை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அச்சிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 300 நிறுவன மருந்துகள் இந்த வரம்புக்குள் வர உள்ளதாகவும், டோலோ,ஆட்ரிவின் உள்ளிட்ட மருந்துகள் இந்த புதிய முறையை பின்பற்ற இருப்பதாக துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான முடிவுகள் 2021ம் ஆண்டே இறுதி செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், வரும் ஆண்டின் டிசம்பரில் முடிக்கவும் தகவல் வெளியாகியுள்ளது.