22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

புது கார் வாங்க போறீங்களா?

தீபாவளி என்றாலே உற்சாகம் கொண்டாட்டம் தான்… இதனை மையப்படுத்தி பல வணிக முயற்சிகளும் நடந்து வருகின்றன.தீபாவளியை குறி வைத்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார் நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வீசியுள்ளன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாருதி சுசுகி,டாடா மோட்டார்ஸ்,ஹியூண்டே உள்ளிட்ட கார்கள் தங்கள் கார்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளனர். அதன்படி அதிகபட்சமாக ஜீப் நிறுவனம் 80 ஆயிரம் ரூபாய் சலுகை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. காம்பஸ் நைட் ஈகிள் என்ற வாகனத்துக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹியூண்டாய் நிறுவனத்தில் கிராண்ட் i10 Nios ரக காருக்கு 48,000 ருபாய் வரையும், மின்சார ரக காரான கோனாவிற்கு, 50,000 ரூபாய் வரையும் சலுகைகள் அறிவித்துள்ளன.இதேபோல் மாருதி நெக்சா மாடலில் 48,000 ரூபாய் வரையிலும், மாருதி சுசுகியில் 49,000 ரூபாய் வரையும் சலுகைகள் கிடைக்க உள்ளன. ஹோண்டா கார்களை பொறுத்தவரை, 27,496 ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதேபோல், Tata Motors நிறுவன கார்களுக்கு 40,000 ரூபாய் வரை சலுகைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *