உச்ச நீதிமன்றம் சொன்னபடியே….
தேர்தல் பத்திரங்கள் வெளியீடு குறித்து கடந்த 15ஆம் தேதி உச்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தேர்தல் பத்திரங்கள் வெளியீடு சட்ட விரோதமானது என்றும், அதனை வெளியிட உடனடி தடை விதிப்பதாகவும் ஆணை இட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஆணைப்படியே வங்கிகள் நடந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் வெளியீடு குறித்து மத்திய அரசு ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்கள் வாங்கலாம் என்று இருந்த விதி வெளிப்படை தன்மை கொண்டது இல்லை என்று கோர்ட் சாட்டையை வீசியது. இந்த நடவடிக்கை ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப் படுகிறது. தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 2018 முதல் இதுவரை 16, 518கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் மேல் முறையீடு செய்ய அரசு ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கு மட்டும், பத்திரம் வாங்கியோர் விவரங்களை,,சீலிட்ட கவரில் தர உள்ளதாக கூறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் சொன்னபடியே தேர்தல் பத்திரங்கள் வெளியீடு வெளிப்படை தன்மை கொண்டது என்றால் அது , நிச்சயம் தேர்தல் நிதியில் வெளிப்படை தன்மை கொண்டது ஆக மாறும் என்று கூறப்படுகிறது.