ஆசிய சந்தைகளில் வீழ்ச்சி..
பெரும்பாலான ஆசிய பங்குச்சந்தைகள் புதன்கிழமை பெரிய சரிவை கண்டன. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மற்றும் அமெரிக்க வேலைவாய்ப்புத்தரவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதால் அமெரிக்க டாலர் மீது முதலீடுகள் குவிகின்றன. ஜப்பான் பங்குச்சந்தையான நிக்கேயிலும் பெரிய வீழ்ச்சியாக 2 %சரிவு காணப்பட்டது. தென்கொரிய பங்குச்சந்தையான கோஸ்பியிலும் 0.6% சரிவு காணப்பட்டது. ஆனால் ஹாங்காங்கைச் சேர்ந்த ஹாங்சாங் பங்குச்சந்தை மட்டும் 6%வரை ஏற்றம் கண்டது. சீனப்பங்குச்சந்தைகள் ஒருவார காலத்துக்கு மூடப்பட்டுள்ளது. தைவான் பங்குச்சந்தை சூறாவளி காரணமாக மூடப்பட்டது. அமெரிக்க பங்குச்சந்தையான s&p 500 பங்குச்சந்தைகள் 0.15% சரிவை கண்டன.
ஈரான் தாக்குதல் நடத்தி முடித்துவிட்ட நிலையில் இஸ்ரேலும், அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ஈரான்-இஸ்ரேல் இடையே கடும் பரபரப்பு நிலவுகிறது. போர் காரணமாக பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் 74.66 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்திருக்கிறது. தங்கம் விலையும் 2654 அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இது அதிகபட்ச விலையை விட சற்றே குறைவாகும்.