3100 கோடி வசூலிக்க ஏத்தர் ஐபிஓவில் திட்டம்..
மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற ஏத்தர் நிறுவனம் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த ஆரம்ப பங்கு வெளியிட முடிவெடுத்துள்ளது. 3,100 கோடி ரூபாய் நிதியை திரட்டுவதற்கான ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏத்தரின் போட்டி நிறுவனமாக கருதப்படும் ஓலா நிறுவனமும் இதே பாணியில் கடந்த மாதம் பணிகளை தொடங்கியது. 2.2 கோடி பங்குகளை முதலீட்டாளர்கள் மற்றும் புரோமோட்டர்கள் உதவியுடன் ஆரம்ப பங்கு வெளியீட்டில் விற்க முயற்சி நடைபெறுகிறது. ஏத்தர் நிறுவனத்துக்கு மிகப்பெரிய துணையாக இருப்பது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம்தான். ஆரம்ப பங்கு வெளியீட்டில் கிடைக்கும் பணம் மூலம் மகாராஷ்டிராவில் புதிய ஏத்தர் ஆலையை தொடங்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. ஆக்சிஸ் கேபிடல், ஜேஎம் ஃபைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் லீட் மேளாலர்களாகவும், லிங்க் இன்டைம் நிறுவனம் பிதவாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏத்தர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஏற்கனவே ஓசூரில் இயங்கி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் அடுத்த ஆலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.