சிக்கன நடவடிக்கை சூப்பர்..
உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ள சூழலில் பல நாடுகளும் தங்கள் ரிசர்வ் வங்கிளின் மூலம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் விலைவாசி,வேலைவாய்ப்பின்மை உயர்ந்து வரும் சூழலிலும் கூட வட்டி விகிதங்களை சில நாடுகள் எடுத்து வருவது நல்ல வியூகம் என்று பாராட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் அண்மையில் வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதால் நல்ல முன்னேற்றம் காணப்பட்ள்ளதாகவும், இதேபோல் இந்தியாவில் ரிசர்வ் வங்கி 190 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளதால் விலைவாசி கட்டுக்குள் வரலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு விற்பனை தொடர்பு சங்கிலி உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஐஎம்எப் அமைப்பு,உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உணவுப்பொருட்கள் விலையேற்றமும் தவிர்க்க முடியாததாக மாற்றியுள்ளது என அந்த அமைப்பு கணித்துள்ளது. அழுத்தமான சூழலிலும் கூட மத்திய ரிசர்வ் வங்கிகள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளதாகவும், விலைவாசி விரைவில் கட்டுக்குள் வரும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது